பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்ட வளர்ச்சியில் புதிய அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று நினைக்கிறோம். புதியவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளை பற்றியும் அரசியலை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீநாத் துறைமுக நகரமான தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவேன் என்று சொல்லி இருக்கிறார். எனவே வெற்றி பெற்றவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களின் தொகுதி என்ன? தொகுதி நிலவரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பல பேர் ஆச்சரியத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளனர். இவர்களை விமர்சனம் செய்வதற்கு பதிலாக இவர்களுக்கு நாம் அறிவுரை கூற வேண்டும்
பாரத பிரதமரின் வளர்ச்சி திட்டத்தில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம், இரவு நேர சேவை என்று வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு புதிதாக வந்தவர்கள் துறைமுக நகரமாக மாற்றுகிறேன் என்று சொல்கிறார்கள் என்பது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது.
இதையும் படிங்க: சி.ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு?... விடிந்ததுமே கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளை கசக்கி எரியும் மிருகங்களுக்கு வாழ்வதற்கு தகுதியே கிடையாது என்பது தான். என்னைக் கேட்டால் அவர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்ய வேண்டும்
இந்த ஆட்சியில் கோவையில் 10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை, விழுப்புரத்தில் இன்னொரு 11 வயது குழந்தை என்று பாலியல் சம்பவங்கள் தொடர்கதை ஆகியுள்ளது என்பது எனக்கு மிகுந்த கவலையாக உள்ளது.
முதல்வர் பதவியேற்ற உடனே சிங்கப்பெண் படை என்றார். இந்த படை மாற்று அதிகாரப்படையாக மாறிவிடக் கூடாது என்று தங்களது சந்தேகங்களை தெரிவித்துள்ளனர் சிங்கப்பெண் படை எந்த அளவிற்கு பெண்களை பாதுகாக்கிறது பல் இல்லாத ஒரு அமைப்பாக இருக்கிறது என்று ஒரு ஆங்கில பத்திரிக்கை கூறியுள்ளது
இந்த அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று முதல்வர் சொல்கிறார். எல்லோ முதல்வர்களும் இதையே சொன்னால் பெரும்பான்மை மக்களின் ஆதங்கத்தை யார் தீர்ப்பது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய அரசாங்கம் இன்னும் அதிக விழிப்புணர்வோடு, அதிக எச்சரிக்கையோடு, மக்களுக்காக பாதுகாப்பான உணர்வோடு இந்த அரசு நடக்க வேண்டும். மாணிக்தாகூருக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு பதவி ஆசை என்பதால் ஓடிக்கொண்டு ஒட்டிக் கொண்டுள்ளீர்கள். பின் வாசல் வழியாக நீங்கள் தனியாக நின்று அமைச்சராவதற்கு இந்த உலகம் இருக்கும் வரை வாய்ப்பு கிடையாது. திமுகவின் தோளில் ஏறி வெற்றி பெற்று இன்று பாஜக வை குற்றம் சாட்டுவதுதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இன்று இந்த ஆட்சியை பற்றி பேசும் ராகுல் காந்தி கட்சியின் கூட்டத்தில் பாஜக அரசு ஓராண்டில் கவிழ்ந்து விடும் என்று தெரிவித்திருக்கிறார் இன்னும் பல ஆண்டுகள் மட்டுமல்ல மறுபடியும் மொடி தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
அந்நிய இயக்கங்களோடு கைகோர்த்துக்கொண்டு நமது மத்திய அரசை நிலைகுலைய செய்ய வேண்டும் என்று மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் கட்சியை சேர்ந்தவர்கள் இங்கே உள்ள ஆட்சியை நிலைகுலையைச் செய்ய பாரதிய ஜனதா ஏற்பாடு செய்தது என்பதை திருத்திக் கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைகளாக இருந்தாலும் சரி, திமுக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்களாக இருந்தாலும் சரி அவர்கள் கைகளை வைத்து கண்ணை குத்திக் கொண்டிருக்கிறார்கள். விஜய் ஆர்.எஸ்.எஸ் இன் பிள்ளைகள் என்று சொன்னீர்கள். இன்று அவர்களிடம் இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள் தேர்தலுக்கு முன்பு பொய் பழியை பாஜக மீதும் ஆர்எஸ்எஸ் மீதும் சுமத்தியுள்ளனர் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்
ஆட்சி அதிகாரத்தில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து இருக்க வேண்டியதுதானே பிறகு எதற்கு அமைச்சர் ஆனீர்கள் எந்த நிலைப்பாடு இந்த அரசிடம் இருக்கிறது. மக்கள் இந்த அரசுக்கு அதிபண்பான்மை கொடுத்திருக்கின்றனர். ஆனால் தினமும் ஆட்டம் காணும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: திருச்சியில் மரணமடைந்த நர்சிங் மாணவி குடும்பத்திற்கு நேரில் சென்று நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கிய தவெக அரசு!