வெளிமாநில அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்க தமிழக அரக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்திலிருந்துகேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரிக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆம்னி பேருந்து சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்துக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் இயக்கப்படும் 456 விரைவுப் பேருந்துகளை இன்று இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிமாநில அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கவும் போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா: நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசு பேருந்து-லாரி..!! பரிதாபமாக பறிபோன 17 உயிர்கள்..!!
கர்நாடகாவிற்கு 183 பேருந்துகள், கேரளாவிற்கு 85 பேருந்துகள், ஆந்திராவிற்கு 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. புதுச்சேரிக்கு 118 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களில் சாலை வரியால் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தனியார் ஆம்பனி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
நவ.7ம் தேதி இரவிலிருந்து கேரளா மாநிலத்திற்கு சென்ற தமிழகம் பதிவெண் கொண்ட 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரளாவில் சிறைப்பிடித்து 70 லட்சம் அபராதம் விதித்தனர். அதேபோல கர்நாடகாவிலும் தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைப்பிடித்து இரண்டரை லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதேபோல் ஆந்திரா, புதுச்சேரியிலும் வரி மற்றும் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பிற மாநிலங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் தமிழகம் வரும்பொழுது கூடுதலாக சாலை வரி வசூலிப்பதன் காரணமாக, தமிழக பதிவு ஏற்றுக்கொண்ட வாகனங்க தங்கள் மாநிலத்திற்கு வரும்போது நாங்களும் அதே அளவு வரி வசூலிப்பதாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இன்று முதல் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில் தான் அம்மாநிலங்களுக்கு வழக்கம் போல் அல்லாமல் விடுமுறை நாட்களில் இயக்கப்படுவது போல் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் இப்படி அசிங்கம் பண்ணலமா? அத்துமீறிய ஊழியகர்கள்! முகம் சுழித்த பக்தர்கள்!