வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

3,192 ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை வழங்காதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி..!

3,192 ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக நியமன ஆணை ஏன் வழங்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு  8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாதது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த  ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 16 மாதங்கள் ஆகி விட்டன. தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: இதை செய்யாமல் மும்மொழி கொள்கையை எதிர்ப்பது துரோகம்… திமுகவை டேமேஜ் ஆக்கிய டாக்டர் ராமதாஸ்.,!

தமிழ்நாட்டில் அரசு வேலை என்பதை குதிரைக் கொம்பை விட அரிதாகி விட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால், அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இன்னொருபுறம் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனர். 

அதிலும் குறிப்பாக இந்த முறை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கொடுமையானது. 2018-ஆம் ஆண்டுக்கு முன்புவரை ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அதில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், முந்தைய ஆட்சியில் 20.07.2018 -தேதியிட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுதி தான் பணியில் சேரமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த அரசாணையை எதிர்த்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும். அதேபோல், இடைநிலை ஆசிரியர் பணிக்கு 2768 பேரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் விடைத் தாள்களை திருத்தும் பணி இன்னும் தொடங்காத நிலையில், அவற்றை உடனடியாகத் திருத்தி தகுதியான  தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.
 

இதையும் படிங்க: உங்க கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சொல்லுங்க.. செல்வபெருந்தகைக்கு கடிதம் எழுதிய அன்புமணி.!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी