தமிழ்நாட்டின் அரசியல் களம் சமீப காலமாக பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், விசிக், இஸ்லாமிய லீக் உள்ளிட்ட கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்த புதிய அரசு அமைந்த சில வாரங்களிலேயே, தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூன் 7 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் கூட அல்ல. இந்த ஆட்சி மூன்று மாதங்களாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார். இந்தக் கருத்து தவெக அரசின் உறுதிப்பாட்டை நேரடியாகக் கேள்வி எழுப்பியதாக பார்க்கப்பட்டது.

முன்பு தவெக ஆட்சியை ஆறு மாதங்கள் வரை கவனித்து, எந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வர மாட்டோம் என்று ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இந்தப் புதிய கருத்து முரண்பாடாகவும், அரசியல் தாக்குதலாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், மூன்று மாதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவலுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்தார். அது முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!
மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க் கொண்டிருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆனால், மூன்று மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதாக திரித்து செய்தி பரப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். சமூக வலைதளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துக்களை தான் மக்கள் கூறி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: சொந்த தொகுதியே இருண்டு போச்சு..! முதல்வர் விஜயை விமர்சித்த TTV தினகரன்..!