பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், அடங்கமறு, அத்துமீறு என்று இளைஞர்களை தூண்டிவிட மாட்டேன். இளைஞர்கள் அனைவரும் நன்றாக படித்து, எந்த வழக்குகளும் இல்லாமல் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று பேசி இருந்தார். அவரது இந்த கருத்து திருமாவளவனை விமர்சிக்கும் வகையில் இருந்தது. இதை அடுத்து அன்புமணி ராமதாஸின் இந்த கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து திருமாவளவன் பேசுகையில், மக்கள் அமைப்பாதவன் மூலமாகவே அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும். இதுமிகவும் எளிமையானது. உனக்கு எதிரான அடக்குமுறைகள் எப்போதும் உடையும் என்றால், நீ கட்டுண்டு கிடக்க கூடாது. உனக்கு அத்து போட்டிருக்கும் அத்துக்குள் முடங்கி கிடக்க கூடாது. அதனை மீற வேண்டும். தனி நபரால் அதனை மீற முடியாது.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது பாமக அவசர ஆலோசனைக் கூட்டம்.. மா.செ.களுக்கு ராமதாஸ் அழைப்பு!

ஒரு அமைப்பால் மட்டுமே மீற முடியும். அமைப்பாய் திரண்டு கோயிலுக்குள் நுழைந்தால் எதையும் செய்ய முடியாது. அத்துமீறலுக்கு என்ன பொருள் என்று புரிந்து கொள்ளாமல், சிலர் அத்துமீறு என்ன சொல்ல மாட்டேன், அதனை செய், இதனை செய் என்று சொல்ல மாட்டேன்.. இப்படி சொல்லி நம்மை கலாய்க்கிறார்களாம்..

அத்துமீறு என்ற சொல்லுக்கு பின் ஒரு அரசியல் இருக்கிறது. காலம் காலமாக இருந்துவந்த அடிமைத்தனத்தை தகர்த்தெறியக் கூடிய சொல். அது ஒரு சொல்லுக்கான சொல் அல்ல. அனைத்து சாதிகள், அனைத்து மதங்களுக்கான சொல்.. எங்கே அடக்குமுறை இருந்தாலும், அந்த அடக்குமுறை எதிர்த்து போராடுவதற்கான போர்க்குணத்தை பெறு என்று பொருள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் இதுமட்டும் பத்தாது; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு.. அன்புமணி வைத்த வேண்டுகோள்!!