திருப்பூர்: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திய தினகரன், “பதவி ஆசை, சுயலாபத்துக்காக பிரிஞ்சிட்டாங்க… இப்போ தூங்குறவங்க, தூங்குற மாதிரி நடிக்குறவங்க எழுந்துக்கணும். இல்லேனா யாராவது எழுப்பணும்!” என்று கடுமையாகச் சாடினார்.
“பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சி செய்தார்கள், இப்பவும் செய்கிறார்கள். அதில் தவறு இல்லை. ஒரு கட்சியில் பிரச்சனை இருந்தால் மத்தியஸ்தர் தேவைப்படும். அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று தினகரன் தெளிவாகக் கூறினார். அதேநேரம், “அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால்தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல்ல முடியும்” என்று அழுத்தம் திருத்தமாக வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலைப் பற்றி பேசிய தினகரன், “தமிழகத்தில் 4 முனைப் போட்டி மட்டுமே இருக்கும். நான் 5-வது அணி அமைப்பேன் என்று பேசினார்கள்… அது உண்மையில்லை. எங்கள் கூட்டணி வெற்றியை நோக்கி அணிவகுக்கும். கூட்டணிக்கு தலைமை தாங்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றன.
இதையும் படிங்க: அமித்ஷாவை சந்தித்தது ஏன்? டெல்லியில் நடந்தது என்ன? தனிக்கட்சியா? தவெக கூட்டணியா? ஓபிஎஸ் விளக்கம்!

இறுதி வடிவம் பெற்றதும் உறுதியாக அறிவிப்பேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க. இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்!” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தேர்தலுக்காக கட்சியின் அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடப்பதாகவும் தினகரன் கூறினார். “தூங்குறவங்கள எழுப்புறது யாரோட வேலைன்னு தெரியல… ஆனா எழுந்துக்கிட்டாதான் அ.தி.மு.க. பிழைக்கும்!” என்ற தினகரனின் ஒரு வார்த்தை இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலாக வலம் வருகிறது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி - தவெக விஜய் போன் பேச்சு?! விரைவில் நேரில் சந்திப்பு! புகைச்சலில் திமுக கூட்டணி!