சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். 65 வயதான இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர் இருவரும் வீட்டில் இருக்கும் போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் சராமாரியாக வெட்டி விட்டு தப்பியொடினர். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வித்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
இதையும் படிங்க: கடைசியா ஒருவாட்டி ப்ளீஸ்.. கழட்டிவிட நினைத்த இன்ஸ்டா காதலி.. காதலன் திட்டமிட்டு அரங்கேற்றிய சம்பவம்..!

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட திமுக நிர்வாகி..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!