அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கமலி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன், அவிநாசி மத்திய ஒன்றிய செயலாளர் சாபி, நகர மகளிரணி இணை அமைப்பாளர் மோகனா, அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் மற்றும் அன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
அவிநாசி மேற்கு ரத வீதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர் கமலி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனாவிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் தனது வேட்பு மனுவை கையில் எடுத்து வராமல் வந்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வந்து அமர்ந்த பின்பு, தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவை கேட்டுள்ளார். அப்போது வேட்பு மனு தயாராகி வருவதாகவும், தங்களது வழக்கறிஞர் கொண்டு வருவார் எனவும் வேட்பாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேட்புமனு இல்லாமல் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் இருக்கக் கூடாது என கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர் மற்றும் உடன் வந்தவர்களை தனது அறையில் இருந்து வெளியேற்றி, காத்திருப்பு அறைக்கு அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: காலில் ஏறிய ஆதவ் அர்ஜுனா கார்..! வலிகள் துடித்த காவலரை தூக்கி ஓடிய தவெகவினர்..!! பதற்றம்..!

இதையடுத்து அவசர அவசரமாக அவிநாசி நிர்வாகி சாபி தங்களது கட்சி வழக்கறிஞரிடம் இருந்த வேட்பு மனுவை வாங்க ஓடிச் சென்றார். அங்கு வேட்பு மனு பூர்த்தி செய்யும் பணி இன்னும் முடிவடையாததால் வேட்புமனு தாக்கல் செய்ய சுமார் ஒரு மணி நேரமாக வேட்பாளர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுவை தாவேகவின் வழக்கறிஞர் நிவேதன் கொண்டு வந்தார்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் கமலியுடன் தவெக வழக்கறிஞர் நிவேதன், நகர மகளிரணி இணை அமைப்பாளர் மோகனா, அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் மற்றும் அன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மிரளப்போகுது ஸ்டேட்டு… விசிலு சத்தம் கேட்டு..!! திருச்சியில் பாட்டு பாடி வாக்குச் சேகரித்த விஜய்..!!