சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ள விஜய், இந்தத் திடீர் கூட்டத்தின் மூலம் தனது அடுத்தகட்ட திட்டங்களை வகுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி குறித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே பனையூர் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் "விஜய்யே தவெக-வின் முதல்வர் வேட்பாளர்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போதைய கூட்டத்தில் "விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக அங்கீகரிக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி" என்றும், தவெக தலைமையில் அமையும் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு "ஆட்சியில் பங்கு" அளிக்கப்படும் என்ற அதிரடி முடிவும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற அரசியல் கட்சிகளைத் தவெக பக்கம் ஈர்க்கும் ஒரு முக்கியத் தூண்டிலாகப் பார்க்கப்படுகிறது.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் தனிக் குழு ஒன்றையும், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையிலான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு’ ஒன்றையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வார்த்தை ஜாலங்கள் பலிக்காது - விஜய்யை அரசியல்வாதியாக ஏற்க முடியாது - நெல்லையில் சரத்குமார் அதிரடி!
ஊழலற்ற நிர்வாகம், சமூக நீதி மற்றும் பொருளாதார மேன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாராக உள்ளது. இன்றைய கூட்டத்திற்குப் பின், தமிழக அரசியலில் ஒரு புதிய ‘கூட்டணி’ உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல் முறையாக.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்..!!