கரூர் சிபிஐ அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் ஆகியோர் 2வது நாளாக ஆஜராகியுள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் பிரச்சார பரப்பரை கூட்டத்தின் போது கூட்ட நெரிசலை சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.110 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , வணிக நிறுவன தடை உரிமையாளர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரியினர் , மின்சார துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பேருந்தின், சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர் சிசிடிவி காட்சிகளை கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரூரில் என்ன நடந்தது? ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளரிடம் துருவித் துருவி விசாரணை..!
இதனைத் தொடர்ந்து நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் சிபிஐ விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். இவர்களிடம் நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் இரவு 8.30 மணி வரை விசாரணை நடத்தினர். அதாவது 10 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
நாட்டையே உலுக்கிய கரூர் கோர சம்பவத்தில் இதுவரை சிக்கிய முக்கிய ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ துருவி, துருவி விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. தற்போது 2வது நாளாக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகியுள்ளன.
பிரச்சார பரப்புரையின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். இதில் அவர்களிடம் சம்பவ நாளன்று நடந்த நிகழ்வுகள், பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… பனையூரில் முகாமிட்ட CBI அதிகாரிகள்..! நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…!