தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை அருகே உள்ள பாரப்பத்தியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாகவே அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது 25ஆம் தேதி மாநாடு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை விஜயகாந்த் உடைய பிறந்த நாளில் நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அடுத்த இரண்டு தினங்களில் விநாயக சதுர்த்தி நடைபெறுவதால் காவல் துறையினுடைய அறிவுறுத்தலின் படி 21ஆம் தேதி மாநாடு நடக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்கி இரவு 7 மணி மாநாடு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் 1:30 மணிக்கு போடப்பட்டிருக்கக்கூடிய ஒன்றரை லட்சம் நாற்காலிகள் நிரப்பப்பட வேண்டும். எனவே முன்கூட்டியே தொண்டர்கள் எல்லாம் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதிகாலை முதலே அதிகப்படியான தொண்டர்கள் தவெக மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
அதிகபடியான கூட்டம் அதிகாலையிலிருந்தே வந்து கொண்டிருப்பதால முன்கூட்டியே மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒருவேளை மதியமே கூட்டம் கூடினால் அப்பொழுதே அந்த மாநாட்டை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் இருக்கிறது. அதாவது மாநாட்டில் கூட்டம் நிரம்புகிற பட்சத்தில் மதியத்திலேயே கூட மாநாடு நடைபெறும் என அந்த நேரத்தை குறிப்பிடாமல் அது முன்கூட்டி நடப்பதற்கான ஆயத்த பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் இரவோடு, இரவாக நடந்த அதிரடி மாற்றம்... கதறப்போகும் திமுக, அதிமுக...!
தமிழக கட்சி கழக தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு பின்புறத்தில் இருக்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கிரீன் ரூமில் தற்பொழுது தங்கி இருக்கிறார். மாநாட்டு நேரம் மாற்றப்பட்டாலும், உடனே அவர் மேடைக்கு வருவார் எனக்கூறப்படுகிறது. அதிகாலையிலிருந்து சாலையில சாரைசாரையாக தொண்டர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது என்று இரண்டாவது கடித்ததின் வாயிலாக தமிழக கட்சி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தி இருந்தாலும் கூட இரு சக்கர வாகனங்களில் கோடிகளை கட்டிக்கொண்டு வந்த வண்ணமே இருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படியே சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் கூடியிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே தான் தொண்டர்களை காக்க வைக்க வேண்டாம் என்பதற்காக மாநாட்டை முன்கூட்டியே ஆரம்பிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: “விஜய் எங்க வீட்டுப்பிள்ளை தான் ஆனா...” விஜயகாந்த் போட்டே விவகாரத்தில் பிரேமலதா மீண்டும் கறார்...!