சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைவராக, தமிழ்த் தேசியத்தை மையப்படுத்திய கொள்கைகளை வலியுறுத்தி வருபவர். 2010ஆம் ஆண்டு முதல் தனித்து தேர்தல்களில் போட்டியிட்டு வரும் இவரது கட்சி, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உயர்ந்தது. இந்த வளர்ச்சியானது, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி தமிழகத்தில் கணிசமான செல்வாக்கு பெற்றிருப்பதைக் காட்டுகிறது. ஆனால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தோற்றம், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை சீமானிடம் உருவாக்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முதலில் விஜயின் அரசியல் வருகையை வரவேற்ற சீமான் தன் தம்பி என கூறி வந்தார். பிறகு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், விஜய் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். அவர், திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமிழ்நாட்டின் இரு கண்கள் என்று கூறியது, சீமானின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. சீமான், விஜய்யின் இந்தக் கருத்தை கொள்கைக்கு எதிரானது என்று விமர்சித்து, கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான் என்று கூறினார். இந்த விமர்சனம், விஜய்யின் கட்சி தமிழ்த் தேசியத்தை முழுமையாக ஏற்கவில்லை என்று சீமான் கருதுவதை வெளிப்படுத்துகிறது.

மேலும், சீமான் தனது பேச்சுகளில் விஜய்யையும் தவெகவின் தொண்டர்களையும் கேலி செய்யும் விதமாக, "டீ விற்கவா இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள் என்றும், புலி வேட்டைக்குச் செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. அணிலே ஓரமாகப் போய் விளையாடு, குறுக்கே வராதே என்றும் பேசி, தவெகவை அரசியல் களத்தில் தீவிரமான எதிரியாகக் கருதவில்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: "இதை யாரும் எதிர்பார்க்கல.." - விஜயின் மாஸ்டர் பிளான் - ராம்ப் வாக் செல்லும் மேடையில் தரமான சம்பவம்...!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மதுரையில் நடப்பது ஒரு கட்சியின் மாநாடு அவ்வளவுதான்., இதில் கருத்து சொல்ல என்ன இருக்கிறது என கேட்டார். அவர்கள் எந்த நோக்கத்திற்காக மாநாடு நடத்துகிறார்களோ அது நிறைவேறினால் சரி என தெரிவித்தார். மேலும், முன்கூட்டியே மதுரை மாநாட்டிற்கு வருகை தந்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் குறித்து கருத்து தெரிவித்த சீமான், நாட்டுல இவ்வளவு பேர் வேலையில்லாமல் இருக்காங்க என்பதை தான் காட்டுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக மாநாடு... வாட்டி எடுக்கும் வெயில்! 375 பேருக்கு முதலுதவி... தொண்டர்கள் தவிப்பு