டிசம்பர் 18ம் தேதி காலை 11.00 மணி முதல் மதியம் 13.00 மணி வரை பெருந்துறை காவல் நிலைய சரகம், மூங்கில்பாளையம் கிராமத்தில் உள்ள விஜயபுரி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பாக பிரச்சார வாகனத்தில் உரையாற்றுவதற்கு கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சி நடத்தும் இடம், நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்பு சம்மந்தமாக கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள்.
1. தேசிய நெடுஞ்சாலையின் (NH 544) சர்வீஸ் ரோட்டில் இருந்து வட புறம் சுமார் 250 அடி தூரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: “விஜயை பார்க்க இவர்கள் எல்லாம் வரக்கூடாது” - ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட செங்கோட்டையன்...!
2. பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும். பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
3. நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் பிரச்சார வாகனம், VIP Boxes, பெண்கள் Boxes, இதர Boxes, உள் நுழையும் மற்றும் வெளியேறும் வழிகள் (Entry and exit points, gang way) குறித்த தெளிவான வரைபடம், காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும். VIP Boxes-க்கு அடுத்ததாக பெண்களுக்கு என்று தனியாக Boxes-அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களுக்கு இட வசதி எங்கே அளிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் Blue print-ல் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
4. நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை ஒவ்வொரு Box-லும் 80% மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
5 பொமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நிழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் போதும் வெளியேற்றப்படும் போதும் தள்ளுமுள்ளு இல்லாமல் இடைவெளி விட்டு வரிசையாக மட்டுமே அனுப்பப்படவேண்டும்.
6. நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒவ்வொரு Box-லும் குடிநீர்வசதி செய்து தரப்படவேண்டும்.
7. நிகழ்ச்சிக்கு வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை தாங்கள் மனுவில் குறிப்பிட்டதை விட மிகாமல் இருக்க வேண்டும்.
8. நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் மருத்துவ குழுக்களும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், எத்தனை மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் பாராமெடிக்கல் பணியாளர்கள் எத்தனை பேர் பணியமர்த்தப்பட உள்ளனர் என்ற விபரம் காவல்துறைக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்.
9. முதலுதவி சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர் மற்றும் உதவியாளர் பெயர் பட்டியல் விபரங்கள் அலைபேசி எண்ணுடன் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
10. ஏதேனும் மருத்துவ அவசர நிலை ஏற்படும் நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அருகாமையில் எத்தனை மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
11.நிகழ்ச்சி நடைபெறும் போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தீ பாதுகாப்பு நடவடிக்கை சான்றிதழ் (Fire Safety Certificate) பெற்றும் நிகழ்ச்சி நடை பெறும் இடத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்துவதற்கு முறையாக அனுமதி பெற்ற கடிதத்தினை காவல் துறை வசம் சமர்ப்பிக்கவேண்டும். ஒலிப்பெருக்கிகள், LED திரைகள், ஆகியவற்றிற்கு அதற்கான உறுதித்தன்மை சான்று (Electrical stability Certificate) அளிக்கப்படவேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது.
12. அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர தனி வழி விடப்படவேண்டும்.
13. நிகழ்ச்சிக்கு எவ்வளவு CCTV கேமராக்கள் மற்றும் PA SYSTEM, LED திரைகள் அமைக்கப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் காவல் துறை வசம் சமர்ப்பிக்கப்படவேண்டும். போதுமான CCTV கேமராக்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிப்பதற்கு ஒரு கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்யவேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றினை Drone Camera வழியாக கண்காணிக்க, கண்காணிப்பு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றிருக்கவேண்டும். Drone Camera Operator பற்றிய விபரங்கள் மற்றும் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
14. தனியார் ஊழியர்கள், தன்னார்வலர்கள் (Volunteers) எத்தனை பேர் பாதுகாப்புக்காக நிகழ்ச்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்ற விபரம் காவல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்னர் கூட்டத்தினர் கலைந்து செல்லும் வரையிலும் வாகனங்கள் பார்க்கிங் பகுதியில் இருந்து முழுவதும் வெளியேறும் வரையிலும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்து வரிசைப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறின்றி அனுப்பி வைக்க வேண்டும்.
15. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள், தொண்டர்கள் வெகுநேரத்திற்கு முன்பு வருவதை தவிர்த்து குறிப்பிட்ட நேரத்தில் வருவதையும், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்க்கும் விதமாக, முன்னரே தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகங்கள் மூலமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படவேண்டும்.
16. பட்டாசு, ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துவர அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். (பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை).
17. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலோ, முக்கிய நபர்கள் வரும் வழியிலோ மின்கம்பம், மரங்கள் உயரமான கட்டிடங்கள் விளம்பர பதாகைகள் ஆகியவற்றின் மீது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏறி நிற்க கூடாது. அதை தாங்களே உறுதி செய்யவேண்டும்.
18. வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட உள்ள வாகன விவரம் பற்றி வாகனம் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு என 18 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, காவல் துறை விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து, உறுதி மொழி பத்திரம் (affidavit) வழங்க தவெக.விற்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அநியாயம் நடக்குது தளபதி… கட்சியை விட்டே நீக்கிட்டாங்க… போராட்டத்தில் குதித்த தவெக தொண்டர்கள்…!