ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்தும் விஜயமங்கலத்தில் கூடி இருந்த கூட்டத்தை பார்த்து கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். நல்ல காரியம் செய்வதற்கு முன்னால் மஞ்சள் எடுத்து வைத்து தான் தொடங்குவார்கள் என்றும் வீட்டில் உள்ள பெண்கள் நல்லது செய்வதற்கு என்றால் மஞ்சள் புடவை தான் கட்டுவார்கள் என்றும் நம் கொடியில் கூட அந்த நேர்மறை எண்ணங்களை கொடுக்கக்கூடிய மஞ்சள் இருப்பதாக தெரிவித்தார். அப்படி மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு பூமி என்று தெரிவித்தார்.
இங்கு வந்து மஞ்சள் பற்றி பேசாமல் வேறு எங்கு மஞ்சள் பற்றி பேசுவது என்று தெரிவித்தார். ஈரோடு மண் விவசாயத்திற்கும் பெயர் போன மண் என்றும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பது காளிங்கராயன் அணை மற்றும் கால்வாய் என்று தெரிவித்தார். அணை மற்றும் கால்வாய் கட்டுவதற்கு உணர்வுபூர்வமான வரலாறு இருப்பதாகவும் தெரிவித்தார். பெத்த அம்மா கொடுக்கும் தைரியம் தாண்டி வேறு எதுவுமே கிடையாது என்று தெரிவித்தார்.

ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அப்படி ஒரு தைரியம் தான் நீங்கள் எனக்கு என்றும் தெரிவித்தார். அதே தைரியத்தை நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள் என்றும் தனக்கு துணையாக இருக்கிறீர்கள் எனவும் இதை எப்படி பிரிக்கலாம், எப்படி கெடுக்கலாம், என்னென்ன அவதூறுகள் சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்னென்ன சூழ்ச்சிகள் செய்து மக்களை நம்ப வைக்கலாம் என்று இது போன்ற சூழ்ச்சிகளை நம்பி இருக்கும் புரட்சியாளர்கள் எண்ணம் எடுபடாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: CLASS எடுக்க வாத்தியார் வர்றாரு… பாத்து கத்துக்கோங்க..! திமுகவை விளாசிய அருண் ராஜ்..!
நீங்கள் என்ன முயற்சி எடுத்தாலும் எல்லாவற்றையும் விட்டு மக்களுக்காக வந்திருக்கும் இந்த விஜய்யை, இந்த விஜியை மக்கள் என்னும் கைவிட மாட்டார்கள் என்றும் மக்கள் கூடவே நிற்பார்கள் என அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது எனவும் தெரிவித்தார். உங்கள நம்பி தாம்பா வந்து இருக்கிறேன் என்றும் இந்த சத்தம் தான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்தார். விஜய் பேசிக் கொண்டிருந்தபோது மேலே ஏறிய தொண்டர் ஒருவரை, தம்பி கீழே இறங்குப்பா எனவும் நீ இறங்கினால் தான் முத்தம் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து மக்களை நோக்கி விஜய் முத்தம் கொடுத்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தை ஆளப்போவது ஒரே தளபதி தான்… ஈரோட்டில் விஜய் சந்திப்பில் செங்கோட்டையன் திட்டவட்டம்…!