தமிழ்நாடு ›

சில சனியன் சகடையால் விஜய் வாழ்க்கையில் பிரச்சனை..!! பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி..!

விஜய் - சங்கீதா விவகாரம் குறித்து பி.டி செல்வகுமார் கருத்து தெரிவித்தார்.

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று திருமணம் செய்து கொண்டனர். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சங்கீதா, விஜயின் ரசிகையாக இருந்து பின்னர் அவரை மணந்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் அவ்வப்போது எழுந்து வந்தன.

குறிப்பாக விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாகக் களமிறங்கிய பிறகு, சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது, லண்டனில் தங்கியிருப்பதாகக் கூறப்படுவது போன்ற தகவல்கள் இந்த வதந்திகளுக்கு முக்கியமாக அமைந்தன. சமீப காலமாக இந்த விரிசல் மேலும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் குறித்து திமுக நிர்வாகி பி.டி. செல்வகுமார் பதில் அளித்தார். அப்போது விஜயின் மனைவி வெளிநாட்டில் இருந்து வந்த பெண் என்றும் அவர் பயந்த சுபாவம் கொண்டவர் எனவும் தெரிவித்தார். இருவருக்கும் இடையிலான உறவு நல்ல முறையில் தான் இருந்தது என்றும் சில சனியன் சகடைகளால் விஜய் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். விஜய் தனது ரசிகர்களுக்கும், தாய் தந்தையர்க்கும், தயாரிப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் என யாருக்கும் உண்மையாக இல்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்… தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

இனிமேலாவது அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். திருப்பாச்சி படத்தில் மட்டும் தங்கைக்கு ஆதரவாக இருந்தால் போதாது என்றும் படத்தில் மட்டும் பெண்களுக்கு ஆதரவாக பேசினால் போதாது என்றும் காதலுக்கு மரியாதை படத்தில் மட்டும் கொடுத்தால் போதாது எனவும் தெரிவித்தார். நிஜ வாழ்க்கையில் காதலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறினார். 

இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி… "தவெக நிர்வாகியால் என் உயிருக்கு ஆபத்து"… பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी