தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்துகிறார். தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் விஜய் மிக தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வந்தார். கரூர் சம்பவம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இந்த நிலையில் அதிலிருந்து மீண்ட விஜய், மீண்டும் தனது மக்கள் சந்திப்பை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்துகிறார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்தி இருந்தார் விஜய்.
நாளை ஈரோடு மாவட்டத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்துகிறார். அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் மாவட்ட எஸ்பி சுஜாதா நேரில் ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் விஜய் நிகழ்ச்சிகளில் போலீசார் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்தும் நிலையில் விஜய் வரும் வழி மற்றும் விஐபி நிற்கும் இடங்களை மாவட்ட எஸ்பி ஆய்வு செய்தார். பிரச்சாரக் கூட்டத்திற்கு தொண்டர்கள் வருவதற்காக அமைக்கப்பட்ட வழி உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் முன்னாடியே இப்படியா..?? ஈரோட்டில் அடித்துக்கொண்ட தவெகவினர்..!! என்ன நடந்தது..??
தொண்டர்கள் ஏரி குதித்து உள்ளே செல்லாதவாறு அமைக்கப்பட்ட தடுப்புகள் வலுவாக உள்ளதாக எனவும் ஆய்வு மேற்கொண்ட அவர், ஆம்புலன்ஸ் வழிதடத்தில் தொண்டர்கள் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். தண்ணீர் வசதி, கழிவறை வசதி ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்த எஸ் பி, கூடுதலாக ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: களைக்கட்ட போகுது. ! ஈரோட்டில் விஜய்... தவெக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!