தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் தமிழக முதல்வர் முன்னிலையில் திமுகவில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இணைந்தார். இதனைத் தொடர்ந்து வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் கும்பகோணம் ஒன்றியத்தில் மட்டும் இன்று ஆயிரம் பேர் கும்பகோணம் அருகே அண்ணல்அக்ரஹாரம் என்ற இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் வைத்தியலிங்க முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் .
இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், பாஜகவிற்கு அடிமையாக அண்ணா திமுக மாறிவிட்டது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்தை அகற்றியதை பற்றி துளி கூட எதிர்க்காதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இந்த தேர்தலோடு அண்ணா திமுக காணாமல் போய்விடும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
மாநில அரசு செலுத்தும் வரியிலிருந்து மத்திய அரசு 50% மாநிலத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார் . ஆனால் ஒன்றிய நிதி அமைச்சர் 41%க்கு மேல் தரமாட்டேன் என அடம்பிடிக்கிறார். தமிழகத்திற்கு தேவையான நிதியை தர ஒன்றிய அரசு மறுக்கிறது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை பார்க்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 3500 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.
இதையும் படிங்க: சிவகங்கையில் மெகா முதலீடு! ரூ.5,300 கோடியில் அமைகிறது எம்.ஆர்.எஃப் (MRF) டயர் ஆலை!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய 2500 கோடி ரூபாயை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. ஜல்ஜீவன் திட்டத்திற்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 3500 கோடி ரூபாயையும் ஒன்றிய அரசு தரவில்லை. கிடைக்கும் நிதியை கொண்டு தமிழக அரசு விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், தவப்புதல்வன் திட்டம், தாயுமானவன் திட்டம் ,
நான் முதல்வன் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வியில் முன்னிலை வகிக்கிறது .
நம்மை காப்பாற்றக்கூடிய ஒரே இயக்கம் திமுக தான் என உறுதியாக தெரிந்து கொண்ட பின்னர் தான் நாங்கள் திமுகவில் இணைந்தோம் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக உள்ளது, பொருளாதாரத்தில் முன்னோடியாக விளங்குகிறது. இதற்கெல்லாம் காரணம் பெரியார், அண்ணா ,கலைஞர், ஆகியோர் அமைத்த அடித்தளம் அதனை தமிழக முதல்வர் சரியான முறையில் பின்பற்றி வருகிறார். நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ,
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தான் மட்டும் வெற்றி பெற்றேன். தற்போது நான் திமுகவில் இணைந்ததன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என வைத்திலிங்கம் மேலும் தெரிவித்தார் .
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம்,தமிழக முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் . அந்த திட்டங்களால் பயன் பெற்றவர்கள் மூலம் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் ,
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான பதிலடி கொடுப்போம் என வைத்திலிங்கம் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!