வீரமணி மீதான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாம்பரம் பகுதி வாராகி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயண் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வாராகி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், வீரமணி வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அவரது நிறுவனத்துக்குச் சொந்தமான 147.87 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறி உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கை முடிக்க வாங்கிய லஞ்சப் பணத்தில் சென்னை பிரபல நகைக்கடையில் இருந்து 24 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எஸ். அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பணம் பிரகாஷ் கண்ணையா வழியாகக் கைமாறி உள்ளது. விசாரணை தொடங்கியதும் அவர் வெளிநாட்டுக்கு ஓடித் தலைமறைவாகிவிட்டார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.24 கோடி பறிமுதல்! 3 வங்கிக் கணக்குகள் முடக்கம்! கிரானைட் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி திருப்பம்!
லஞ்சப் பணத்தை மறைக்கவே இந்தத் தங்கம் வாங்கப்பட்டுள்ளதா என அறிய நகைக்கடை ரசீதுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

சிறுமியரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கிரானைட் வீரமணி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் வீரமணி உட்பட நான்கு பேரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த 23ம் தேதி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசனிடம் மூன்று நாள் விசாரணை நடத்தவும், வீரமணி உட்பட மூவரிடம் இரண்டு நாள் விசாரணை நடத்தவும் அனுமதியளித்தார்.
போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில், கணேசன் நேரிலும், வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நான்கு பேரின் நீதிமன்றக் காவலை வரும் 6ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போக்சோ வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின், ரகுபதியையும் விசாரிக்க வேண்டும்! SIT முன் தவெக பரபரப்பு மனு!