தமிழ் சினிமாவின் டாப் நடிகர், தவெக கட்சி தலைவர், மக்களுக்காக கோடிகளில் வாங்கி சம்பளத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு வந்தவர், சூப்பர் ஃபேமிலி மேன் என்ற இமெஜ் அனைத்துமே சங்கீதா வைத்த ஒரே ஒரு குற்றச்சாட்டால் சல்லி, சல்லியாக நொறுங்கி வருகிறது. எவிஜய் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருக்கிறார் என சங்கீதா தனது விவகாரத்து மனுவில் குற்றச்சாட்டியதை அடுத்து இந்த வழக்கு பட்டி, தொட்டி எல்லாம் கவனம் பெற்றது. நடிகராக மட்டுமின்றி தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் விஜய் இருப்பதால் அவர் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.
சங்கீதா தனது விவகாரத்து மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக புகார் தெரிவித்தார் சங்கீதா. 2021ம் ஆண்டில் அந்த உறவு குறித்து கண்டுபிடித்து கேள்வி கேட்டதற்கு, முதலில் விட்டுவிடுகிறேன் என்று கூறினார் விஜய். பின்னர் குற்ற உணர்வே இல்லாமல் நடிகையுடனான தொடர்பை தொடர்ந்தார்.
நடிகையும், விஜய்யும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அந்த நடிகை வெளியிட்டதால் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. விஜய் தன்னை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார் சங்கீதா. விஜயை விட்டு பிரிந்து லண்டனில் வசித்து வரும் சங்கீதா அங்கு அவரது குடும்ப தொழிலை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. 400 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான சங்கீதா சொர்ணலிங்கம், விஜய் கொடுப்பதாக சொன்ன 225 கோடி ரூபாய் ஜீவனாம்சத்தை ஏற்றுக் கொண்டு விவகாரத்து வழக்கை வாபஸ் பெறவுள்ளார் என்ற செய்தி வெளியாகின.
இதையும் படிங்க: விவாகரத்து விஷயம்..!! விஜய் இமேஜை திமுக கெடுக்க பாக்குது... குண்டைத் தூக்கிப் போட்ட செல்லூர் ராஜு..!!
ஆனால் இன்று சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மூலம் விஜயின் ஒட்டுமொத்த மறுபக்கமும் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் அனுமதிக்க கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள சங்கீதா, நான் இங்கிலாந்தை சேர்ந்தவராக இருப்பதால் தங்குவதற்கு வேறு இடமில்லை என்பதால் அனுமதிக்க வேண்டும் என்றும்,வழக்கு முடியும்வரை, மாற்று இடம் வழங்கும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்டுள்ளார். தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது என குண்டைத் தூக்கிப் போட்ட சங்கீதா, நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுகிறார்கள் என பகீர் கிளப்பியுள்ளார்.
நிலைமை இப்படியிருக்க பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அந்த நடிகையால் விஜய் குடும்பமே துண்டு துண்டாக சிதறிக் கிடக்கிறதாம். மனைவி சங்கீதா லண்டனிலும், மகன் சஞ்சய் சென்னை அசோக் நகரில் வாடகை வீடு ஒன்றிலும், மகள் தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் பேயிங் கெஸ்டாகவும் தங்கி இருக்கிறார்களாம். வருகின்ற நாட்களில் சங்கீதா செய்தியாளர்களைச் சந்திக்கும் பட்சத்தில் விஜயின் மறுமுகமும், அந்த நடிகை பற்றிய ரகசியமும் வெளியே வரும் என வெளியாகி வரும் தகவல்கள் தவெக தொண்டர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!