தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு தமிழ் சினிமாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களுக்குள், 717 டாஸ்மாக் மதுக்கடைகளை வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் மூட உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை உடனடியாக வரவேற்ற கமல்ஹாசன், “தமிழ் குடும்பங்களின் நீண்டகால எதிர்பார்ப்பு இது” என்று பாராட்டினார்.

மேலும், இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தப் பாராட்டு வெறும் அரசியல் மரியாதை மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய ஆதரவாகவும் பார்க்கப்படுகிறது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் இதயப்பூர்வமான வாழ்த்துப் பதிவை வெளியிட்டார்.
இதையும் படிங்க: அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!
இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜயை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விஜய் காட்டிய அன்பும் பண்பும் நெகிழ்ச்சி அளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். பல்வேறு இடையூறுகளை சந்தித்து வரும் திரைப்படத்துறைக்கு ஆதரவளிக்க கோரிக்கை வைத்ததாகவும், 6 கோரிக்கைகளை முன் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை மேம்படுத்தும் திட்டங்களை தன்னிடம் விஜய் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?