வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்.. பதட்டமாக உள்ளது.. தொண்டர்களுக்கு சொன்ன விஷயம்..!

கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று படப்பிடிப்பிற்காக மதுரை செல்கிறார். அவரை காண காலை முதலே அவரது தொண்டர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி போலீசார் அவர்களுக்கு உள்ளே நுழைய தடை விதித்த நிலையில், அலப்பறை செய்தனர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்து பேசினார். அப்போது, மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2வது நாள் பூத் கமிட்டி கருத்தரங்கம்..! த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்பு..!

தான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை செல்வதாகவும், கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன் என்றும் தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து விட்டு என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன் என்றும் நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.,

யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம் எனக்கும் கேட்டுக் கொண்டார்.  கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வா தலைவா வா! உற்சாகம்.. ஆரவாரம்.. விஜயை வரவேற்க காலை முதலே குவிந்த தொண்டர்கள்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी