தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார். 11 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருக்கக்கூடிய புத்தூர் அண்ணாசிலை அருகே தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தளர் விஜய் கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர், குண்ணம் ஆகிய பகுதிகளில் பிரச்சார சுற்றும் பயணத்தை முடித்த விஜய், இன்றைய தினம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
நாகப்பட்டினம் புத்தூர் அண்ணாசிலை சந்திப்பு என்கின்ற இடத்தில் 11 மணிக்கு விஜய் உரையாற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது. முன்னதாக புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் உரையாற்ற காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில அந்த இடத்தில் உயர் மின்னடுத்த கம்பிகள் இருப்பதால் அருகில் உள்ள அண்ணாசிலை சந்திப்பில் விஜய் உரையாற்ற அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அண்ணாசிலை சந்திப்பில் 35 நிமிடங்களுக்குள் உரையை நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
என்ன பேச போகிறார் விஜய்?
தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், விஜய் என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் குறிப்பாக நாகப்பட்டின மாவத்தை பொறுத்தவரை மீனவர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய பகுதி. மீனவர்களுடைய அதிகமான பிரச்சனை நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கிறது. எனவே மீனவர்கள் பிரச்சனை, விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரூட்டை மாற்றிய விஜய்... தவெக சுற்றுப்பயண திட்டத்தில் அதிரடி மாற்றம் - வெளியானது முக்கிய தகவல்...!
அதே போன்று கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக ஆட்சி என்ன இந்த மாவட்டத்தில் செய்யாமல் இருக்கிறது? நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் என்ன இருக்கிறது என்பது குறித்தெல்லாம் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மீனவர்களுடைய வாழ்வாதார பிரச்சனை இங்கு அதிக அளவில் இருப்பதாக இங்க இருக்கக்கூடிய மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்சனை குறித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேச இருப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை போல கூட்டம் அதிக நெரிசல் காணப்படுவதால் அதை தவிர்ப்பதற்காக காவல்துறை பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளை விஜய் பிரச்சாரம்... நாகையில் காவல்துறை விதித்த 20 கட்டுப்பாடுகள் என்னென்ன?