கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் பாஜக கூட்டணி மீது ரங்கசாமி கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் சமீபத்திய ரங்கசாமியின் நடவடிக்கை அமைந்துள்ளது.
2021ம் ஆண்டு எந்த கட்டாயமும் இல்லாமல், புரட்டோகால் மீறியும் நடிகர் விஜயை நேரில் சென்று பனையூரில் உள்ள அவரது இல்லத்திலேயே புதுச்சேரி முதலமைச்சரான ரங்கசாமி சந்தித்தார். அப்போது விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும், அவர் தீவிர அரசியலில் களமிறங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இதனால் விஜயைத் தன் பக்கம் வளைக்க, புதுச்சேரிக்காரரான புஸ்ஸி ஆனந்த் மூலம் ரங்கசாமி முயற்சித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.
தான் ஒரு முதலமைச்சர் என்பதையும் மறந்து ஒரு நடிகரை வீடு தேடிச் சென்று சந்தித்த ரங்கசாமி, இன்று கூட்டணி கட்சியின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நோஸ் கட் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: வாயில் வடை சுடுகிறாரா ஸ்டாலின்?... ஜெயலலிதா பாணியில் வெளுத்து வாங்கிய எடப்பாடி...!
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து புதுச்சேரியிலும், தமிழகத்திலும் போட்டியிட்டன. அதன் பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. தற்போது அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வந்துவிட்டது.
இதனிடையே, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்துடன் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக., பொதுச் செயலாளர் பழனிசாமி புதுச்சேரிக்கு வந்து நோணாங்குப்பத்தில் உள்ள ஓட்டலில் கடந்த 11, 12ம் தேதிகளில் 2 நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் புதுச்சேரிக்கு வந்த கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமியை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை.
நடிகரை விட, முன்னாள் முதல்வரான பழனிசாமி எந்த விதத்தில் குறைந்து விட்டார் என அதிமுகவினர் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தவிர்த்திருந்தால் கூட அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அதனால் சந்திக்கவில்லை எனக்கூறலாம். கூட்டணி கட்சி தலைவரை ரங்கசாமி ஏன் சந்திக்க மறுத்தார் என்றால், அதன் பின்னால் விஜயின் அறிவிப்பு இருக்கக்கூடும் எனக்கூறப்படும்.
சமீபத்தில் விஜய் எக்காரணம் கொண்டும் பாஜக, திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கட் அண்ட் கறாராக அறிவித்திருந்தார். ஆனால் ரங்கசாமியோ விஜய் உடன் கூட்டணி வைத்து புதுச்சேரி தேர்தலில் களம் காண திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை ரங்கசாமி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மேலும் பாஜக மீது ஆளுநர் விவகாரத்தில் ரங்கசாமி அப்செட்டில் இருப்பதும் இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமருக்கு வெள்ளை குடை... தமிழ்நாட்டில் வீராப்பு! யாரு கூட கூட்டணி வச்சா உங்களுக்கென்ன? இபிஎஸ் ON FIRE!