தமிழகத்தில் உள்ள கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற முழக்கம் ஒரு பக்கம் தீவிரமாக ஒளித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதே கோயில் நிர்வாகத்தின் உடைய சாவியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் தமிழக வெற்றி கழகத்தோட தலைவரும், முதலமைச்சருமான சி ஜோசப் விஜய் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆன்மீக அரசியல் களத்திள் பெரும் விவாத புயலை கிளப்பி இருக்கிற தமிழக வெற்றி கழக தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம். ஆளுநர் மாளிகையில் நடந்து முடிந்துள்ள நிலையில தற்போதைய ஒட்டுமொத்த அரசியல் விவாதங்களும் ஒரே ஒரு துறையை நோக்கிதான் திரும்பியுள்ளது. அது தமிழகத்தின் மிக முக்கிய பாரம்பரிய பின்னணி கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றிருக்கிற ஸ்ரீரங்கம் தொகுதியோட எம்எல்ஏவான ரமேஷ் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது தான் தற்போது கோட்டை வட்டாரத்தில மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில குறிப்பாக பிராமண அமைப்புகள் மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புகள் தரப்பில கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாடு நீக்கப்பட்டு ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்களிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற முழக்கம் மிக தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருது. இதற்காக பல சட்ட போராட்டங்களும், சமூக ஊடக பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருது. இப்படிப்பட்ட ஒரு தார்மீக மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் நிலவி வரும் சூழல்ல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எடுத்திருக்கிற [இசை] இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கு. ஒரு பிராமண அமைச்சர் கிட்ட அறநிலைய துறை.
இதையும் படிங்க: அதிகாரத்தில் பங்கு... "சொன்னதை செய்தார் விஜய்"..! தவெக பெருமிதம்..!
ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு அறநிலையத் துறையை ஒப்படைத்திருப்பது, விஜயின் அரசியல் கணக்கு என்ன என்பதைக் குறித்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. குறிப்பாக ஆன்மீக பூமியான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரமேஷிடம் இந்தத் துறையை ஒப்படைத்ததன் மூலம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க விஜய் முயற்சித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில், இந்த முடிவு தவறானது என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதனால் விஜய்மீது வலதுசாரி அமைப்புகள் சுமத்தக்கூடிய “இந்து மத எதிர்ப்பு” என்ற முத்திரையை உடைக்க, இந்த நியமனம் வலுவான கேடயமாக அமையும் எனவும் பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் நம்பிக்கையைப் பெறவும், ஆன்மீக மற்றும் கோயில் நிர்வாக பாரம்பரியங்களை நன்கு புரிந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அந்தத் துறையின் தலைவராக நியமிப்பதன் மூலம், ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் மத்தியில் நல்ல மதிப்பைப் பெறலாம் என்று தமிழக வெற்றி கழகத் தலைமையகம் கணக்கிட்டுள்ளது.
ஆனால், இந்த நியமனம் புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. “கோவில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அதே சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இப்போது அதே அறநிலையத் துறையின் அமைச்சராக அமர்ந்து, அரசு கட்டுப்பாட்டைத் தொடரவிருக்கிறார் என்பதே அந்த முரண்பாடாகக் கூறப்படுகிறது.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ரமேஷ் கோவில்களை தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போகிறாரா? அல்லது கோவில் சொத்துகள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களில் புதிய கொள்கை முடிவுகளை எடுக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் அந்த அமைப்புகளிடையே எழுந்துள்ளது.
திராவிட அமைப்புகளின் எதிர்வினையும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வரும் சமூகநீதி மற்றும் அறநிலையத் துறை கொள்கைகளின் பின்னணியில், இந்த நியமனத்தை திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் எவ்வாறு அணுகப்போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
அறநிலையத் துறை என்பது அனைத்து சாதியினருக்கும் சமத்துவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் துறையாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தேர்வு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதா என்ற விமர்சனங்களும் மெல்ல எழத் தொடங்கியுள்ளன.
ஸ்ரீரங்கநாதரின் பாதம் பணிந்து வெற்றி பெற்ற ரமேஷுக்கு, இன்று அதே ரங்கநாதர் கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறையின் பொறுப்பை விஜய் வழங்கியுள்ளார். “கோவில்களை விடுவிக்க வேண்டும்” என்று முழங்கியவர்களிடமே, “கோவில் நிர்வாகத்தை உங்களிடமே ஒப்படைக்கிறேன்; சிறப்பாக நடத்துங்கள்” என்று விஜய் அரசியல் நகர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை தமிழகத்தின் ஆன்மீக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும் என்று போராடியவர்களிடமே அறநிலையத் துறையின் கடிவாளத்தை விஜய் ஒப்படைத்திருப்பது அரசியல் ரீதியாக சாமர்த்தியமான நகர்வா, அல்லது விபரீதமான பரிசோதனை முயற்சியா என்பதற்கான பதில் காலப்போக்கில்தான் தெரியவரும்.
எது எப்படியிருந்தாலும், பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் சமூகநீதி பாதையில் பயணித்து வரும் தமிழக அரசியல் யதார்த்தத்துக்கும், வலதுசாரி அமைப்புகளின் ஆன்மீக அரசியல் அணுகுமுறைக்கும் இடையில் அமைச்சர் ரமேஷ் இனி எடுக்கப்போகும் ஒவ்வொரு முடிவும், தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படிங்க: உங்க இடம் என்னான்னு தெரிஞ்சி செயல்படுங்க... கண்கள் சிவந்த விஜய்... தவெகவினருக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!