மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் டிசம்பர் 16-ஆம் தேதி மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
எழுமலை ராம் ரவிகுமார் தாக்கல் செய்த வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் திமுக அரசு மூன்று முறை நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதை அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
இதை எதிர்த்து தலைமைச் செயலாளர், ஏடிஜிபி, மதுரை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் உட்பட மொத்தம் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஜெயச்சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் திபம் விவகாரம்! மதுரை உயர்நீதி மன்றத்தில் காரசார விவாதம்!

விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் வழக்கறிஞர் அருணாசலம் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கேட்டார். இதை நீதிபதிகள் மறுத்தனர். “விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஏற்கெனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டது. இது சீரியஸான விவகாரம். இனி யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது” என்று எச்சரித்தனர்.
ஆனால் வழக்கறிஞர் அருணாசலம் மீண்டும் வற்புறுத்தியதால் நீதிபதிகள் கோபமடைந்தனர். “வெளியேறுங்கள்” என்று காட்டமாக உத்தரவிட்டனர். அவர் மறுத்ததால் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வீரர்கள் உதவியுடன் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. பார் கவுன்சில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
உத்தரவை கண்டித்தபடி வழக்கறிஞர் அருணாசலம் வெளியேறினார். இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்கிறது.
இதையும் படிங்க: திமுகவினரே திமுகவை தோற்கடிப்பார்கள்!! திருப்பரங்குன்றம் விவகாரம்! பாஜக கடும் விமர்சனம்!