வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு..! இந்த ஷூட்டிங் தேவையா..? நயினார் சாடல்..!

முதலமைச்சர் விஜய் என்ற 300 பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த நிலையில் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலக நுழைவு வாயில் அருகே புதிய பேருந்து சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 300 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்திருக்கிறார். விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை ஜோசப் விஜய் அரசு வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

முதல்வர் விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். 300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு 40,000 ரூபாய் வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வந்த ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் 1 கோடி ரூபாய் இன்று வீணாகியிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளே எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் வேளையில் இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் வேளையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா? என்று நயினார் சாடினா.

இதையும் படிங்க: ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்… என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க… நயினார் ஆவேசம்..!!

"மக்கள் பணத்தை தொட மாட்டோம்.. தொடவிடவும் மாட்டோம்" என்று கூறிய முதல்வர் ஜோசப் விஜய், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: தவிக்கும் விவசாயிகள்… தவெக அரசின் வஞ்சனை..! நயினார் கண்டனம்.!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी