வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு… டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு…!

டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

டாஸ்மாக் பார்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகளும், அவற்றோடு இணைக்கப்பட்ட 2,640 பார்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 மதுபானக் கடைகளைத் தமிழக அரசு சமீபத்தில் மூடியது. 

டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும், அப்போது புதிதாக பார் நடத்த விரும்புவோரும் அந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் புதிய டெண்டர்கள் விடுக்கப்படாமல், 6 மாத காலத்திற்கு அவகாசத்தை நீட்டித்தது. 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml ‘டெட்ரா பேக்’ விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!

தற்போது ஆட்சி அமைத்துள்ள தவெக அரசும் புதிய டெண்டருக்கான அழைப்பை விடுக்காமல், ஏற்கனவே பார் நடத்துவோருக்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த 3 மாதத்திற்கு பிறகு டெண்டர் விடுக்கப்படலாம் அல்லது மேலும் கால அவகாசமானது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் மேலாளர் தலைமையில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: பணிச்சுமையால் அரங்கேறிய விபரீதம்… ஆரணியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी