• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தீவிரமடையும் போராட்டம்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! கொந்தளிப்பில் டாஸ்மாக் ஊழியர்கள்..!!

    17-ந்தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
    Author By Shanthi M. Sat, 14 Feb 2026 12:40:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tasmac-employees-to-protest-against-closure-of-liquor-shops-on-feb-17th

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிர போராட்டப் பாதையில் சென்று வருகின்றனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தை சிஐடியு (CITU), ஏஐடிசி (AITUC), பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்கம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. மேலும், சில அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

    employees

    தமிழகத்தில் தற்போது 4,749 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 23,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாகக் குறைந்த ஊதியத்தில் (சிலருக்கு ரூ.10,000 மட்டுமே) பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதியம் போன்ற பலன்களை வழங்க வேண்டும் என்பது முதன்மைக் கோரிக்கையாக உள்ளது. 

    இதையும் படிங்க: என்னது..?? டாஸ்மாக்கில் மும்மொழி அறிவிப்பு பலகையா..?? TNFactcheck விளக்கம்..!!

    கூடுதலாக, காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கு தனி ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பிற கோரிக்கைகளும் உள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அரசு அல்லது டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது ஊழியர்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி, வரும் 17-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதி இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளையும் மூடி, சாவியை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு, 17-ஆம் தேதி முதல் பணிக்கு செல்ல மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காலி பாட்டில்களை ஒப்படைக்கும் திட்டத்தையும் முன்னெடுக்க உள்ளனர். இதனால், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படலாம். இதனால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    employees

    ஆளும் கட்சியுடன் தொடர்புடைய தொ.மு.ச. (தொழிலாளர் முன்னணி சங்கம்) போராட்டத்தில் இணையுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதிமுக அண்ணா தொழிற்சங்கம் இதில் கலந்து கொள்ளுமா எனக் கேட்டபோது, அதன் மாநிலச் செயலாளர் சிவகுமார் தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறியுள்ளார்.

    டாஸ்மாக் நிர்வாகம் இந்த காலவரையற்ற கடை அடைப்பைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி, போராட்டத்தை தவிர்க்க அரசு முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: சென்னையில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! காரணம் இதுதான்..!! கலெக்டர் அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    தவெக வேட்பாளர் பட்டியல்! விஜய் இன்று அறிவிப்பு!! விசில் போட தயாராகும் நிர்வாகிகள்! பெரம்பூரில் போட்டி?!

    தவெக வேட்பாளர் பட்டியல்! விஜய் இன்று அறிவிப்பு!! விசில் போட தயாராகும் நிர்வாகிகள்! பெரம்பூரில் போட்டி?!

    அரசியல்
    4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!!  நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்!

    4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!! நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்!

    அரசியல்
    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    விளையாட்டு
    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக வேட்பாளர் பட்டியல்! விஜய் இன்று அறிவிப்பு!! விசில் போட தயாராகும் நிர்வாகிகள்! பெரம்பூரில் போட்டி?!

    தவெக வேட்பாளர் பட்டியல்! விஜய் இன்று அறிவிப்பு!! விசில் போட தயாராகும் நிர்வாகிகள்! பெரம்பூரில் போட்டி?!

    அரசியல்
    4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!!  நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்!

    4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!! நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share