• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட விடமாட்டோம்!" ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அமைச்சர் ரமேஷ் அதிரடி

    கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட அபகரிக்க அனுமதிக்கப்படாது என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.
    Author By Pandian Fri, 24 Jul 2026 13:21:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-temple-land-encroachment-action-palani-land-scam-cbcid-investigation

    கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட சட்டவிரோதமாக அபகரிக்க அனுமதிக்கப்படாது என்றும், கோவில் சொத்துகளை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

    பழநி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலமோசடி தொடர்பான வழக்கு குறித்து பேசிய அமைச்சர், இந்த விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    கோவில் சொத்துகளின் முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணிக்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதற்கட்டமாக பழநி கோவிலின் சொத்துகள் ஆய்வு செய்யப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அறுபடை வீடு கோவில்கள் மற்றும் அதிக நிலப்பரப்புகளை கொண்டுள்ள 50 முக்கிய கோவில்களின் சொத்து விவரங்கள் கணக்கெடுக்கப்படும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

    பல இடங்களில் கோவில் பெயரில் ஆவணங்கள் இருந்தாலும், வருவாய் பதிவேடுகள், பட்டா விவரங்கள், நிலத்தின் தற்போதைய பயன்பாடு ஆகியவை சரிபார்க்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அந்த நிலங்கள் விவசாயம், வணிகம் அல்லது வேறு பயன்பாட்டில் உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படும். மேலும், ஆக்கிரமிப்புகள், குத்தகை விதிமீறல்கள் மற்றும் வாடகை தொகைகள் முறையாக செலுத்தப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    breakingnews

    அதேநேரத்தில், சட்டப்படி விவசாயிகளுக்கும், உரிய முறையில் குடியிருக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் மீட்கப்படாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். கோவில் சொத்துகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கோவில் நிர்வாகத்தை மேம்படுத்துவது, பக்தர்களுக்கான வசதிகளை அதிகரிப்பது, ஊழியர்களின் நலனை பாதுகாப்பது மற்றும் கோவில் பாரம்பரியம் மற்றும் சொத்துகளை காப்பது ஆகிய நான்கு முக்கிய அம்சங்களில் வரும் ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

    மேலும், கோவில் நிதி தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் கோவில்களில் அதிக செலவில் வசதிகளை உருவாக்குவதற்கு பதிலாக, உண்மையான தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

    தற்போது பல்வேறு கட்டண தரிசன முறைகள் உள்ள நிலையில், அவற்றை எளிமைப்படுத்தி இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என இரண்டு பிரிவுகள் மட்டுமே கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். கோவில்களின் நிதிநிலை மேம்பட்ட பின்னர் கட்டண தரிசன முறையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

    கோவில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பான இந்த நடவடிக்கைகள், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில் நிலங்களின் நிலையை வெளிப்படையாக ஆய்வு செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 'கர்த்தரின் தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி'... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share