வேலை இல்லாதவர்களுக்கு வேலை வழங்கவும், வறுமையை ஒழிக்கவும், கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப்படும். அதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்தில், தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது, 91 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பயனடைகின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானியர்கள் தொடர்ந்து இந்தியாவில் தங்கலாமா..? மத்திய அரசு கூறும் விளக்கம் என்ன?

இதனிடையே இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுக சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளது மத்திய அரசு. அதாவது தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியில் தற்போது ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் 100 நாள் வேலை திட்டம் தொடங்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: கிடப்பில் வீசப்பட்ட ஒரு டஜன் எஸ்டி, எஸ்சி, ஓபிசி அறிக்கைகள்.. 7 ஆண்டுகளாக வெளிப்படுத்தாத மத்திய அரசு..!