திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் மாணவர் விடுதியில் 12 வயதுடைய மாணவன் ஒருவன், விடுதி வளாகத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகாமையில் உள்ள மாராந்தை என்ற கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் புதல்வன் சேர்மன் துரை எனும் மாணவன் வடக்கன் குளத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளான். விடுதியில் உள்ள கிணற்றின் அருகே துணி காய போடச் சென்றபோது, அங்குள்ள தொட்டி உடைந்து கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன் கிணற்றில் விழுந்தது தற்செயலான விபத்தா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. கிணறு பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததா, விடுதி நிர்வாகத்தின் அலட்சியம் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. மாணவன் உயிரிழப்பு சம்பவத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார். பள்ளி மாணவன் மரணம் நிகழ்ந்தது எப்படி என்றும் பெற்றோர் அனுமதி இன்றி பிரேதப் பரிசோதனை செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
பெற்றோர்கள் தனது குழந்தையைப் பார்க்க வருவதற்கு முன்பாகவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் காவல்துறை அவசரம் காட்டியது ஏன் என்றும் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் போது, நீதிமன்ற உத்தரவின் படி வீடியோ எடுக்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார் . இரண்டு மருத்துவர்களுக்கு மேல் இடம்பெற்றிருந்தனரா என கேட்டுள்ள கிருஷ்ணசாமி, பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து ஒருவர் கூட இடம்பெறாதது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்.. ரோபோ சங்கர் மகளுக்கு தமிழக அரசு வார்னிங்..!