கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 வயது இந்து சிறுமியை கடத்தி, கட்டாயமாக மதம் மாற்றி, ஒரே நாளில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ‘லவ் ஜிகாத்’ என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) தலையிட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம்பூரைச் சேர்ந்த அப்துல் கைப் (21) மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் நடத்தி வைத்த மத போதகர்கள், வாலிபரின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் இப்படி நடந்தது: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவரது கட்டடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்த முஸ்லிம்பூர் அப்துல் கைப் (21), அந்த டிரைவரின் 17 வயது மகளிடம் ஆசை வார்த்தை கூறி பழகினார். கடந்த அக்டோபர் 23-ம் தேதி சிறுமியை கடத்திச் சென்றார். அக்டோபர் 25-ல் சிறுமியின் தந்தை கிருஷ்ணகிரி மகளிர் போலீஸில் புகார் அளித்தார்.
அக்டோபர் 27-ம் தேதி போலீசார் இரு தரப்பையும் அழைத்தனர். அப்போது சிறுமி புர்கா அணிந்து, கைகளில் மெஹந்தி போட்ட நிலையில் அப்துல் கைப்புடன் 15 பேருடன் வந்தார். போலீசார் சிறுமியை தந்தையிடம் ஒப்படைப்பதாகவும், 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அப்துல் கைப்பின் பெற்றோரிடம் எழுதி வாங்கினர். ஆனால், அதே நாள் இரவு அப்துல் கைப் சிறுமியை முஸ்லிம்பூருக்கு அழைத்துச் சென்று இஸ்லாமிய முறைப்படி ‘நிக்கா’ செய்து, முதலிரவும் நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை?! எடியூரப்பா காலை சுற்றும் போக்ஸோ வழக்கு! மீண்டும் சம்மன்!
சிறுமி தந்தையிடம் கூறியதாவது: “அப்துல் கைப் என்னை பெங்களூரு வழியாக முஸ்லிம்பூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு பச்சைக் கோடு போட்ட ரிஜிஸ்டரில் கட்டாயமாக கையெழுத்துப் போட வைத்தார்கள். உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது – எனக்குப் புரியவில்லை. எனக்கு புதிய பெயர் வைத்தார்கள். ‘நிக்கா’ என்று திருமணம் நடத்தினார்கள். கறி விருந்து கொடுத்தார்கள். நான் மறுத்தும் கட்டாயப்படுத்தி முதலிரவு நடத்தினார்கள்.”
இதைத் தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர், வி.எச்.பி. நிர்வாகிகளுடன் சேர்ந்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். “போலீசார் போக்சோ வழக்கு பதியாமல் சிறுமியை கடத்தல்காரருடன் அனுப்பி வைத்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்க்காமல் விட்டனர்” என்று குற்றம் சாட்டினர்.

வி.எச்.பி. மாவட்டத் தலைவர் சாந்தகுமார் கூறுகையில்: “காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இதே போன்ற ‘லவ் ஜிகாத்’ நடக்கிறது. சிறுமிகளை ஆசை வார்த்தை காட்டி கடத்தி, மதம் மாற்றி, திருமணம் செய்து, பின்னர் தலாக் சொல்லி விடுகின்றனர்.
இங்கு 17 வயது சிறுமியை ஒரே நாளில் மதம் மாற்றி திருமணம் செய்துள்ளனர். உடந்தையாக இருந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதல் கடைநிலை போலீசார் வரை அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். அப்துல் கைப், அவரது பெற்றோர், நிக்கா நடத்திய மத போதகர்கள் மீது உடனடியாக போக்சோ வழக்கு பாய வேண்டும்.”
புகாரைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி போலீசார் அப்துல் கைப் மீது போக்சோ சட்டம், கடத்தல், கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். திருமணம் நடத்திய மத போதகர்கள், அப்துல் கைப்பின் பெற்றோர் உள்ளிட்டோர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேளுங்க! இப்போ இல்லையினா எப்போ? தர்மசங்கடத்தில் திருமா!