திருவாரூர் மாவட்டம் வில்லியநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் ஹரிஹரன் மணிகண்டன் மற்றும் கும்பகோணம் திருநீலக்குடி பகுதியைச் சேர்ந்த மணிவேல் ஆகிய நால்வரும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கீழ்குடி பகுதியில் ஓடக்கூடிய புத்தாறு ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்ற பொழுது நால்வரும் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதன் பிறகு பொதுமக்கள் மூன்று பேரின் உடல்களை தடுப்பணையிலிருந்து மீட்டார்கள் மேலும் ஒருவரின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டார்கள் நான்கு நபர்களின் உடல்களும் தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனையில் உள்ளது அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் இதில் மணிகண்டன் என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: டெல்லியில் முதல் முறையாக.. வரும் 24ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு.. தொடங்கி வைக்கிறார் அமித்ஷா..!
இதையும் படிங்க: ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு.. விமர்சித்த காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா..!!