வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (நவ.19) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நாளை (நவ.20) மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
21-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
22 & 23-ம் தேதி கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
24 & 25-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும்.
இதையும் படிங்க: நவ., 12-ஐ குறிச்சு வச்சுக்கோங்க!! தமிழகத்தில் அடித்து ஊற்றப்போகும் மழை!! வெதர் அப்டேட்!
சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° C, குறைந்தபட்சம் 24-25°C ஆக இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 23-ம் தேதி வரை தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் -அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல் இந்தப் பகுதிகளில் மணிக்கு 35-65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், “22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் ென் மழ் தமிழகத்தில் பரவலான மழை பெய்யும்” என்றனர்.
இதையும் படிங்க: அக்டோபரில் கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழை! நவம்பரில் என்ன செய்யும்? வெதர் அப்டேட்!