இது தொடர்பாக உயர் நீதிமன்றப் பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுக்க மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் இப்போது கரூர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராஜலட்சுமி இப்போது விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல் வெளியிட்டனர்.. சென்னையில் நிலவரம் எப்படி..?

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த நந்தினி தேவி கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இரு தரப்பு வாதம் இன்று நிறைவடைந்த நிலையில், வரும் மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தீர்ப்பு தேதி வெளியான நிலையில் நீதிபதி நந்தினி தேவி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பணியிட மாற்ற அறிவிப்பு என்றே கூறப்படுகிறது. இப்போது பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தீர்ப்பு என்னவாகும் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்... மீண்டும் அதிமுகவில் பரபரப்பு!!