அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி.சம்பத் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்மையில் நடைபெற்ற தேர்தல் பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி நிலவும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்தச் சூழலில், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அதன் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தொடர்ந்து இரண்டாம் கட்ட தலைவர்கள், மூன்றாம் கட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "வாயில் நல்லா வருதாம்"..! முதல்வர் வாயில் வராத விஷயம் தெரியுமா.? ஜெயக்குமார் விளாசல்..!
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன். எம்.சி.சம்பத் ஆகியோருடன் மேலும் பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டது, தேர்தல் வெற்றிக்கு உதவியாக இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
செங்கோட்டையனைப் போல தாங்களும் முன்னதாகவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தால், தங்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஆதங்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலரும் இனி தாமதிக்காமல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதே தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்ற எண்ணத்தில்இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அதிமுக, தற்போது தனது முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை இழந்து சவாலான நிலையை எதிர்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், முக்கிய முன்னாள் அமைச்சர்கள் எனக் கருதப்படுபவர்கள் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய தினம் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல், மேலும் சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்த இணைப்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், இதுவரை பெயர்கள் வெளியாகாத நிலையில், சில அதிமுக நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தெரிய வருகிறது.
தொடர்ச்சியாக எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!