தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும், வருடத்திற்கு இரண்டு முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி.

அந்த அவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: அடிதூள்; அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் ரீஸ்டார்ட்; குட்நியூஸ் சொன்ன முன்னாள் அமைச்சர்!

பாஜகவுடன் அதிமுக மீண்டும் ஏன் கூட்டணி வைத்தது என்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் தரப்பதாகவும், பாஜக உடனான கூட்டணியை ஏற்காத மூத்த நிர்வாகிகளிடம் அவர் கருத்து கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் ஏற்பட்ட கூட்டணிக்கு பிறகாக நடைபெறும் செயற்குழு கூட்டம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடமாட்டாங்க... காரணம் சொல்லும் அப்துல் ஜாபர்..!