சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசியதாவது, தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி என்பது காலம் செய்த முடிவு. திமுகவினர் அச்சமடைந்துவிட்டார்கள். அதிமுக செய்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை திமுக செய்து வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருகும் ஆதரவை கண்டு எங்களுக்கே வியப்பாக உள்ளது. 15 லட்சம் பேர் பயனடையும் பட்டாசு தொழிலை பயங்கரவாத தொழிலாக மாற்றியது திமுக. அதிமுக மீது யார் கை வைத்தாலும் வருகின்ற மே மாதம் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
பட்டாசு உற்பத்தியாளர்களை மிரட்ட நினைத்தாலோ, பட்டாசு தொழிலை முடக்க நினைத்தாலோ, பட்டாசு தொழிலை கேலி பொருளாகினாலோ எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று 500- வாகனங்களுடன் சென்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவேன் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: 10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!
பட்டாசுத் தொழிலை முடக்கநினைத்தால் திமுக ஆட்சியை புதைகுழிக்குள் அனுப்பாமல் விடமாட்டோம். பட்டாசுத் தொழிலை முடக்க நினைப்பவர்களை நான் முடக்குவேன். பட்டாசுத் தொழிலை நசுக்கும் அதிகாரிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். அதிமுகவில் என்னால் யாருக்கும் எந்த துன்பமும் வராது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு கட்டளை தளபதி இபிஎஸ் தான்... அமித் ஷாவின் பல்லை பிடுங்கிய ராஜேந்திர பாலாஜி