தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நகர்வுகள் வேகமெடுத்துள்ளன. பாமகவில் நீண்டகாலமாக நிலவி வரும் உள் கட்சி மோதல் இந்த கூட்டணி விவகாரத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இடையே தலைமை மற்றும் கொள்கை விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த ஆண்டுகளில் ராமதாஸ் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்த நிலையில், அன்புமணி தரப்பு அதிமுகவை நோக்கி திரும்பி உள்ளது. முக்கிய நிகழ்வாக, இன்று அன்புமணி ராமதாஸ் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதிமுக - பாமக இடையே சட்டமன்றத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அன்புமணியும் கையெழுத்திட்டனர். அதிமுக உடனான கூட்டணியில் பாமகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பாமகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட்டு ஒன்றையும் கொடுக்காதிமுக தலைமை சம்மதம் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அன்புமணி கூட்டணி தொடர்பாக முடிவு செய்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கிய நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. இருப்பினும் ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருமகளின் பதவி இனி மகளுக்கு!! ஆட்டத்தை ஆரம்பித்தார் ராமதாஸ்! சவுமியா அன்புமணியின் தலைவர் பதவி காலி!