ஆரணி எம்.ஜி.ஆர் சிலை முன்பு அதிமுக தொண்டர் ஓருவர் வேட்டி சட்டை அவிழ்த்து தனக்கும் மனைவிக்கும் பதவி வழங்காததை கண்டித்து சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பு ஆரணி ஒன்றிய மொரப்பதாங்கல் கிராமத்தை சேர்ந்த
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலு என்பவர் திடிரென எம்.ஜி.ஆர் சிலை முன்ப அலப்பறையில் ஈடுபட்டார். மேலும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக கரை துண்டு அணிவித்து அணிந்திருந்த அதிமுக கரை வேட்டி சட்டையை அவிழ்த்து அரை நிர்வாணமாக சாலையில் படுத்து கொண்டு அலப்பறையில் ஈடுப்பட்டார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து எம்.ஜி.ஆரின் விசுவாசியாகவும் பல ஆண்டுகளாக கட்சியில் உழைத்துள்ளேன் எனக்கும் என் மனைவிக்கும் பதவி வழங்காமல் முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன் என்னைஓதுக்கிவிட்டார் என கூறி கட்சியின் லெட்டர் பேடு கட்சியின் ஆவணங்களை சாலையில் கொட்டி தொடர்ந்து அலப்பறையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: எழுதி கொடுத்து படிக்க ஸ்டாலினா? மனசுல பட்டத பேசுற இபிஎஸ்! வலுக்கும் விமர்சனங்கள்
பின்னர் எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆகியோர் சம்பவடத்திற்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். பின்னர் இது சம்மந்தமாக மாவட்ட செயலாளர் ஜெயசுதா எம்.எல்.ஏ சேவூர் ராமசந்திரன் ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு : கட்சியினர் தீவிர விசுவாசி தற்போது மனநிலை சற்று பாதிக்கபட்டுள்ளன இது சம்மந்தமாக வேலுவின் உறவினர்களிடம் வருகைபுரிந்து வேலுவை அழைத்து செல்ல அறிவுறுத்தபட்டுள்ளன எனவும் கூறினர்.
இதையும் படிங்க: “எலி ஓடுறதை எல்லாம் சட்டை பண்ண முடியாது”... திமுகவில் ஐக்கியமான அன்வர் ராஜா குறித்து ஆர்.பி.உதயகுமார் கருத்து...!