வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அஜித் பவார் மரணம் எதிரொலி..! மகாராஷ்டிரா துணை முதல்வரானார் சுனேத்ரா..! பதவியேற்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஆக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்திய அரசியல் வட்டாரத்தையும், மகாராஷ்டிரா மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.அஜித் பவார் மும்பையிலிருந்து தனது சொந்த தொகுதியான பாரமதிக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல்களுக்கான பிரசாரத்திற்காக நான்கு முக்கிய கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தார்.

விமானத்தில் அஜித் பவாருடன் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதீப் ஜாதவ், விமான பணிப்பெண் பிங்கி மாலி, முதன்மை விமானி சுமித் கபூர் மற்றும் இரண்டாம் விமானி ஷம்பவி பதாக் ஆகியோர் பயணித்தனர். மொத்தம் ஐந்து பேரே விமானத்தில் இருந்தனர். காலை 8:10 மணியளவில் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு பாரமதி விமான நிலையத்தை அடைந்தது.

தரையிறங்கும் முயற்சியின்போது, விமானம் திடீரென இடது பக்கமாக சாய்ந்து, ரன்வேயின் முனையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையில் மோதியது. உடனடியாக விமானம் பெரும் தீப்பிழம்பாக மாறியது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: மும்பை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்..?? விறுவிறு வாக்குப்பதிவு..!!

மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆக இருந்த அஜித் பவார் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: அஜித் பவார் மரணம்..! விமானத்தில் நடந்தது என்ன? கருப்பு பெட்டியை மீட்டு தீவிர விசாரணை..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी