மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வ பாண்டி முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட குற்றப்பத்திரிகை அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர்.
மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளைக் ஆகியோர் கொண்ட அமர்வு மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் , சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்டு.. சென்னையில் பரபரப்பு..!!
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தனிப்படை காவலர்கள் பல்வேறு நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தடைகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் முதற்கட்ட குற்றப்பத்திரிகை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுத்தமா நம்பிக்கை இல்ல! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. ஐகோர்ட் போட்ட தடாலடி உத்தரவு..!