அமிர்தசரஸ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நகரமாகும். இது சீக்கிய மதத்தின் ஆன்மீக மற்றும் கலாசார மையமாக விளங்குகிறது. இந்த நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாளமாக விளங்குவது ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் பொற்கோவில். இது சீக்கியர்களின் புனிதமான வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. அமிர்தசரஸ், பஞ்சாபின் மஜ்ஹா பிராந்தியத்தில் அமைந்துள்ளது மற்றும் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து 455 கி.மீ. தொலைவிலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1,132,383 ஆகும். மேலும் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீட்டின்படி, இது பஞ்சாபின் மிகவும் மக்கள் தொகை கொண்ட பெருநகரப் பகுதியாகும், சுமார் 20 லட்சம் மக்களைக் கொண்டது. பொற்கோவில், சீக்கிய மதத்தின் நிறுவனரான குரு நானக் அவர்களின் பயணத்துடன் தொடர்புடையது. 1502 ஆம் ஆண்டு குரு நானக் இந்தப் பகுதியில் பயணித்தபோது, இந்த இடத்தின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்ந்தார்.

பின்னர், நான்காவது குரு ராமதாஸ் இங்கு ஒரு குளத்தை வெட்டி, அதைச் சுற்றி ராம்தாஸ்பூர் என்ற நகரத்தை உருவாக்கினார். இந்தக் குளம் பின்னர் அமிர்த சரோவர் என்று பெயர் பெற்றது. இந்த நிலையில், பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
பொற்கோவிலுக்குள் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சலால் கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரியவந்த நிலையில், யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவினராக இருந்தாலும் சும்மா விடமாட்டேன்... எச்சரித்த செந்தில் பாலாஜி... கலக்கத்தில் கரூர் உ.பி.க்கள்...!
இதையும் படிங்க: விநாயகர், வேளாங்கண்ணி மாதா, மெக்கா படங்கள்... யாகத்துடன் தொடங்கியது தவெக 2வது மாநாடு பூஜை...!