தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காட்டும் பயங்கரமான இரட்டை நிலைப்பாடுகளும், வாக்காளர் பட்டியல்களின் SIR ஒரு சதித்திட்டம் என்ற கருத்தும் அவரது புரிதல் எவ்வளவு வெற்றுத்தனத்தைக் காட்டுகிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல்களின் தீவிர திருத்தங்கள் இதற்கு முன்பு 13 முறை மேற்கொள்ளப்பட்டதாக அண்ணாமலை கூறினார். 1952-56, 1957, 1961, 1965, 1966, 1983-84, 1987-89, 1992, 1993, 1995, 2002, 2003, மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தம் முதல் முறை அல்ல என்றும் பீகாரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்காளர் பட்டியல் நீக்கம் குறித்து தேஜஸ்வி யாதவின் கற்பனையை ஸ்டாலின் நம்பியிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் . ஏனெனில், தேஜஸ்வி யாதவ் முன்பு தனது வாக்காளர் பட்டியல் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார், மேலும் அவரது புகைப்படத்துடன் கூடிய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததால் மறுக்கப்பட்டது என தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு உண்மையானதாகத் தெரியவில்லை என்பதால், அனைத்து சாத்தியக்கூறுகளுடனும், வாக்காளர் பட்டியலில் 57.43 லட்சம் போலி வாக்காளர்கள் இருக்கலாம் என்று திமுக கூறியதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடிய நேரத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: “வெள்ளை சட்டை, ஸ்மார்ட் வாட்ச்” ... மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்த அண்ணாமலை... கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டீர்கள் என்றும் மீண்டும் 2017 ஆம் ஆண்டில், திமுக கட்சி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை திருத்தக் கோரி தேர்தல் ஆணையரிடம் ஒரு பிரதிநிதித்துவத்தை சமர்ப்பித்தது எனவும் கூறினார். மேலும் ஒரு படி மேலே சென்று, ஆதார் அட்டைகளை வாக்காளர் அடையாள அட்டைகளுடன் இணைக்க வேண்டும் என்றும், வீடு வீடாக வாக்காளர்களை சரிபார்க்க வேண்டும் என்றும் கோரியது என தெரிவித்தார். ஜனநாயகத்தின் புனிதம் வாக்காளர் பட்டியலின் நேர்மையைச் சார்ந்துள்ளது என கூறிய அவர், மேலும் திமுக இந்த ஞானத்தை மீண்டும் கண்டுபிடித்து, மாநிலத்தில் மற்றொரு தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோயைத் தவிர்க்கும் என்று நம்புவதாக கூறினார்.
இதையும் படிங்க: ஆணையம், குழுவால் என்ன பயன்? கொஞ்சம் சொல்லுங்க ஸ்டாலின்! அண்ணாமலை சரமாரி கேள்வி…!