ஆளுநர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியுடன், தமிழகத்தில் பள்ளிக்கல்வி சூழல் சரிந்து வருவதாகவும், கல்வித்தரம் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தக் கருத்து, மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்கனவே இருக்கும் அரசியல் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு நிராகரித்ததால், மத்திய அரசு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது, இது மாநில அரசின் கல்வி மேம்பாட்டு முயற்சிகளை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆளுநரின் அறிக்கை இந்தப் பின்னணியில், மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழக ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களை ஆளுநர் ரவி செய்வதாக குற்றச்சாட்டு முன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வியின் தரம் குறித்து அவர் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

சுதந்திர வாழ்த்துடன் தமிழக பள்ளிக்கல்வி சூழல் சரிந்து வருவதாக ஆளுநர் அறிக்கை வெளியிட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி கொடுத்துள்ளார். கல்வி சூழல் குறித்து ஆளுநரின் வார்த்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை எப்படி பாதிக்கும் என்பதை உணர வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: அவரு கையால வாங்க மாட்டேன்! ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி… பல்கலை.யில் பரபரப்பு..!
நமது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் ஆளுநர் ரவி யாரை திருப்திப்படுத்த எப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். உயரிய பதவியில் இருக்கும் ஆளுநர் ரவி வஞ்சிக்கக் கூடிய வார்த்தைகளை பேசக்கூடாது என்பதுதான் வேண்டுகோள் என்றும் கூறினார்.
யாரோ கொடுக்கும் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒன்றை சொல்வதை ஆளுநர் வேலையாக வைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு! ஸ்ரீ வஸ்தவாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்..!