தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து, மாநிலத்தின் கலாச்சார, வரலாற்று மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்தது. இதற்காக, 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாட்டிற்கு பிரத்யேகமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை என்று வெளியிடப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது, இருமொழி கொள்கை தான் என்பது மாநில கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கைதான்! தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

அனைவருக்குமான கல்வியை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் எல்லாம் என்பதில் இருந்து பிறந்தது தான் மாநில கல்விக் கொள்கை என தெரிவித்தார்.
தொலைநோக்கு பார்வையுடன் மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என கூறினார். அச்சத்துடன் மாணவர்கள் பயிலும் நிலை ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என தெரிவித்தார்.
எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வி என்பது திட்டம் என்றும் வாழ்க்கை மதிப்பீடுகள், தொலைநோக்குப் பார்வை உள்ளடக்கியதாக மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார். உடற்கல்வி உள்ளிட்ட விஷயங்களை பார்த்துக் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்த அன்பில் மகேஷ், மாநில கல்விக் கொள்கை காலத்திற்கு ஏற்றார்போல் வருடந்தோறும் மாற்றப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: கலைஞர் இருந்தா அனுமதிச்சு இருக்க மாட்டாரு! எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு ரத்து.. நீதிமன்றம் ஆதங்கம்..!