ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் இருந்து அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. இன்று வரை பிரச்சனை ஓயாத நிலையில் கட்சியை இருவரும் இரு பிரிவுகளாக பிரித்துக் கொண்டுள்ளனர். ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என்று பிரிந்து தனித்தனியாக செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள், நடைபயணம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கட்சியின் தலைவர் யார் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர். முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் பிரச்சனை தொடங்கிய நிலையில், ராமதாசின் மகளும், முகுந்தனின் தாயாருமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் இடம் பெற்று இருப்பது மேலும் இந்த விவகாரத்தை தூண்டி உள்ளது.

அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் இரண்டாவது முறையாக கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதற்கும் அன்புமணி செவி சாய்க்கவில்லை. இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அன்புமணி ராமதாஸ் எந்தவிதமான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அன்புமணி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்தார். தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்று கூறினார். விளக்கம் அளிப்பதால் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம் என கூறினார். எனவே அன்புமணியே பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தார்.
இதையும் படிங்க: அன்புமணி உரிமை கோரினால் எங்களையும் கேட்கணும்! ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்...