தமிழகத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்துப் பாஜக முன்னாள் தலைவர் திரு. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பல புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமல் மெத்தனம் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசுக்கு அண்ணாமலை விடுத்துள்ள சுட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் நேரு தொடர்பான ஊழல் புகார்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விரிவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தனை மாதங்கள் கடந்தும், அந்தப் புகார்கள் மீது இதுவரை எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படாமல் நிலுவையில் (Pending) வைக்கப்பட்டிருப்பது ஏன்?
இதையும் படிங்க: "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லஞ்ச ஒழிப்புத் துறை சுதந்திரமாகச் செயல்படத் தடையாக இருப்பது யார்? புதிய அரசு "ஊழலற்ற நிர்வாகம்" என்று முழங்கும் நிலையில், பழைய புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் சூழலில், நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளைக் தூசி தட்ட வேண்டியது அவசியம் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். "ஆட்சியாளர்கள் மாறினாலும், அரசு இயந்திரம் உண்மையாக உழைக்க வேண்டும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" என்பதே பாஜக-வின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ள சூழலில், திமுக மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அண்ணாமலை மீண்டும் கையிலெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!