அதிமுகவில் இருந்து தொடர்ந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட சி விஜயபாஸ்கர் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இது கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைவது தற்போது ஆட்சியில் இருக்கும் த.வெ.க அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்ற, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் மீதுள்ள நம்பகத்தன்மையின்மையா என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.

இல்லையெனில் அவர்களது தொடர்பை துண்டித்து விட்டு ஒன்றிய அரசிடம் தற்போது வைத்திருக்கின்ற மறைமுக உறவை வெளிப்படையாக உறுதிப்படுத்தப்படுவதற்காகவா என்றும் கேட்டுள்ளார். அதிமுகவின் 25 MLA-க்கள் இந்த அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக நம்பியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது எனது சரமாரி கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: இன்பதுரை வெற்றி செல்லாது... அதிரடி தீர்ப்பு..! தலையில் இடியை இறக்கிய ஹைகோர்ட்..!
MLA பதவியை ராஜினாமா செய்து கொண்டு இருப்பது அமைச்சர் பதவிக்காகவா? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கலாமே என்றும் கூறினார். ஆறு மாதத்திற்குள் தேர்தலில் நின்று MLA -வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதுமானதே என்ற விதியையும் சுட்டிக்காட்டினார். தவெக அரசு அதை நிறைவேற்றுமா ? அல்லது 25 MLA-க்களையும் தொடர்ந்து ஏமாற்றுமா? என்றும் அப்பாவு கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜாதி, மதம் ஒழிப்பா? வேட்பாளர் பட்டியலை பார்த்தாலே பதில் தெரியும்!".. அப்பாவு தாக்கு..!