சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி உள்ளார். அப்போது பேசிய அவர், மக்கள் தீர்ப்பை திமுகவினர் மதிக்கவே இல்லை என்றும் அந்த காலத்தில் பேசாத பேச்சா என விளக்கம் சொல்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இரட்டை அர்த்தத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் விஜய், திமுக ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
1970களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்தியநாராயண பிரதர்ஸ் டென்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்ததாகவும் தெரிவித்தார். பவள விழா பாப்பா என்று கூற வந்து தனது வார்த்தைகளை முதல்வர் விஜய் வெளிப்படுத்தாமல் பவள விழா கட்சி என்று கூறினார். முரசொலி கட்டிடம் தொடர்பாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

கலைஞர் மீது தனக்கு மதிப்பு மரியாதையும் உண்டு என்றும் கூறுவது அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டென்டருக்கு 29 லட்சம் தவணை முறையில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும்.! நல்ல சாவே வராதாம்... என்ன பேச்சு..? பேரவையில் CM பதிலடி.!!
சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். PARTY FUND என்பதை குறிப்பிட்டு இப்போதும் கூறுகிறேன் ஆதாரம் பக்கத்தில் தான் உள்ளது என்று தெரிவித்தார். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் இருக்கிறது என்றும் அதை எடுத்து படியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் என்றார். பார்ட்டி பன்ட் குறித்து அமலாக்க துறையே கூறி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊழலுக்கு "Zero Tolerance!"..! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!